தஞ்சாவூரைச் சேர்ந்த டிக்-டாக் பிரபவலம் திவ்யா என்பவருக்கும் தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி என்பவருக்கும் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிடுவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஒருவரை ஒருவர் அவதூறுப் பேசி காணொலி வெளியிட்டுவந்தனர். இதனிடையே சுகந்தி, அக்டோபர் 14ஆம் தேதி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், "நாகலாபுரம் பகுதியில் உள்ள எனது வீட்டில் நான், எனது அக்கா நாகஜோதி, எனது தந்தை ராஜு, எனது 16 வயது மகள் ஆகியோர் பாலியல் தொழில் நடத்திவருவதாக யூ-ட்யூபில் டிக் டாக் திவ்யா அவதூறு பரப்பிவருவதால் அவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் திவ்யாவை காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் திவ்யா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: டிக் டாக் பிரபலங்களுக்குள் மோதல்: காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்