மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நாடு முழுவதும் எண்ணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நாகை மக்களவைத் தேர்தல் திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது.
இதையடுத்து, இன்று திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த், தேர்தல் பார்வையாளர் சந்திரகாந்த் டாங்கே, மக்களவைத் தேர்தல் பொது பார்வையாளர் சிபி.நேமா ஆகியோர் பார்வையிட்டனர்.
சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தனித்தனி கட்டடத்தில் வைத்து எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை இடத்திற்கு செல்ல முகவர்களுக்கு தனி வழிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாக்கு மையத்தின் பாதுகாப்பு, வாகன நிறுத்தங்கள் போன்றவற்றை மாவட்ட கண்காணிப்பாளர் துரை பார்வையிட்டார்.