ETV Bharat / state

மயிலாடுதுறையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 800 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர்! - Mayiladuthurai news

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூரில், பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் தனியார் கல்லூரி தோட்டத்தில் 800 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நட்டு வைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 9:13 PM IST

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 800 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை: தமிழகத்தில் வனப்பரப்பை 23.7 சதவிகித்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால், தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு ஊக்குவிப்பது இவ்வியக்கத்தின் நோக்கமாகும். அதன் அடிப்படையில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனிநபர்கள் தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மரக்கன்றுகளை நடுவதற்கு, தங்களுக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விபரங்களுடன் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை இணையதளம் மூலமாகவோ அல்லது கடிதத்தின் வாயிலாக இயக்குநர், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8-வது தளம், சைதாப்பேட்டை, சென்னை - 600 015 என்கிற முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் விபரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெற 18005997634 என்கிற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள நீடூரில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு வனத்துறையின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் கல்லூரித் தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று (செப்.24) நடைபெற்றது.

இதில் 800 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நட்டு வைத்தார். அதில் தேக்கு, மகாகனி, வேங்கை போன்ற மயிலாடுதுறை மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைக்கும், மண்ணின் தரத்துக்கும் உகந்த மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக, அனைவரும் மரக்கன்றுகளை வளர்ப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க, அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து கல்லூரியில் இருந்து மாணவிகள் பேரணியாக புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியே மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறும் சென்றனர்.

இதையும் படிங்க: “பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வரக் கூடாது” - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.