சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி நாகை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு 100 விழுக்காடு வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்ஃபி பாயிண்ட்டில் மாவட்ட ஆட்சியர் பி பிரவின் நாயர் அலுவலர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட்டில் "என் தேர்தல் செல்ஃபி எனவும், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து வாக்களிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் செல்ஃபி பாயிண்ட்டில் மகளிர் திட்ட ஊழியர்கள் மகிழ்ச்சியோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: நாகையில் குடிமராமத்துப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு