ETV Bharat / state

சிவன் கோயிலில் சுரங்கப்பாதை - மழைநீர் வடிகாலாக மாற்றம்! - ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே 1200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதையை மழைநீர் வடிகாலாக மாற்றப்பட்டுள்ளது.

சிவன் கோயிலில் சுரங்கப்பாதை
சிவன் கோயிலில் சுரங்கப்பாதை
author img

By

Published : Oct 30, 2020, 10:02 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி ஊராட்சி விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு 1959-ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானத்தால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கழித்து 2016-இல் 26-வது குருமகா சந்நிதானம் சண்முகதேசிக சுவாமிகள் திருப்பணியை தொடங்கி வைத்தார். 2019 டிசம்பரில் அவர் மறைந்தார்.

27-வது சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் குடமுழுக்குப் பணியை தீவிரப்படுத்தி அடுத்த மாதம் 4-ஆம்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த கோயிலில் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவரும்போது கோயிலின் வடபுறத்தில் இரண்டு மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டது. அதில் மேல்புறத்தில் ஒன்றை கட்டுவதற்காக 10 அடி ஆழத்தில் குழிதோண்டியபோது கோயிலின் உள்பிரகார சுவற்றை ஒட்டியவாறு தொன்மை வாய்ந்த மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு நீளம் 4அடி அகலத்தில் சுவர் ஒன்று இருந்தது.

சிவன் கோயிலில் சுரங்கப்பாதை

அந்த சுவற்றை உடைத்து பார்த்தபோது சுரங்கம் ஒன்று இருந்தது தெரியவந்தது. அதன் உள்ளே 10அடி தூரம்வரை சென்று பார்த்தபோது அங்கே ஓரு சுவர் உள்ளது தெரியவந்தது. இந்த சுரங்கத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதாமல் கோயில் நிர்வாகத்தினர் அதை அடைத்துவிட்டு மழைநீர் வடிகாலுக்கான சிமெண்ட் உரை இறக்கி முற்றிலும் மூடியுள்ளனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி என்பவர் கூறுகையில் 'தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிசுகளுக்கு போர் பயிற்சி உட்பட அனைத்துப் பயிற்சிகளும் மிகவும் ரகசியமாக பயிற்சிக் களங்கள் கோயில் வளாகத்தில்தான் அமைக்கப்பட்டு வந்துள்ளது. அனைத்துப் பயிற்சிகளும் முடிந்தபிறகு அவர்களுக்கு முடிசூட்டி அவர்களை அரன்மணைக்கு அழைத்துச் செல்வார்கள்.

மயிலாடுதுறைக்கு வடக்கே வரகடை என்ற இடத்தில் இரண்டு ஆறுகள் இணையும் இடத்தில் உள்ள கோயிலில் இதன் வரலாறு தெரிய வந்துள்ளது. அதே போன்று செம்பனார்கோவில் பகுதியில் உள்ள முடிதிருச்சம்பள்ளி, முடிகொண்டநல்லூர், மணல்மேடு பகுதியில் உள்ள முடிகொண்டநல்லூர் போன்ற ஊர்களின் பெயர் இளவரசர்களின் வரலாற்றை விளக்குகிறது.

இந்த கோயிலுக்கு அடிக்கடி அரச வாரிசுகள் வருவதும், தங்குவதும் வாடிக்கையாக இருந்திருக்கலாம். கோயிலில் இருக்கும் காலத்தில் ஆபத்து என்றால் இதுபோன்ற சுரங்கப்பாதையின் வழியே தப்பித்துச்செல்வதற்கான முன் ஏற்பாடுதான் இந்த சுரங்கப்பாதையாகும். என தெரிவித்தார்.

விளநகரில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது மழைநீர்வடிகால் தொட்டி அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை முழுமையாக மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: 'சென்னையில் மழைநீர் வடிகால் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.