நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தில் ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணாவர்கள் பயின்றுவருகின்றனர். அங்கு தலைமையாசிரியர் பரமேஸ்வரன், ஆசிரியை ரூபியா உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணி புரிந்துவருகின்றனர்.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் பரமேஷ்வரன் பள்ளி மாணவிகளுக்கும் பள்ளி பெண் ஆசிரியைக்கும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆசிரியை ரூபியா, தனது கணவர் சங்கமித்ரனுடன் சேர்ந்து தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் ராணி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தலைமை ஆசிரியரிடம் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கையூட்டை பெற்றுக் கொண்ட தாசில்தார், புகார் கொடுத்த ஆசிரியை ரூபியாவை பணி மாற்றம் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரூபியாவின் கணவர் சங்கமித்ரன், வட்டார கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். இது குறித்து தகவலறிந்து வந்த செம்பனார்கோவில் காவல் துறையினர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வந்து விளக்கம் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு ஆயுள்