புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் ஆலயம். இங்கு சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளதால் இது சனி பரிகார தலங்களில் முதன்மை தளமாக விளங்குகிறது. இதனால் சனி பரிகாரம் வழிபாடு செய்ய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சனிபகவான் டிசம்பர் 27ஆம் தேதி அதிகாலை 5.22 மணி அளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ளன.
இம்முறை சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்துகொள்ள இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். மேலும் குறிப்பாக நளன் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்த குளங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பரிகார பூஜை, அர்ச்சனைகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநள்ளாறு நளன் குளத்தில் நீராட பக்தர்களுக்கு தடை
புதுச்சேரி: பிரசித்தி பெற்ற திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் நளன் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.