ETV Bharat / state

டெங்கு காய்ச்சல் பாதிப்பு: நாகைக்கு 8ஆவது இடம்! - டெங்கு பாதிப்பில் நாகை எட்டாவது இடம்

நாகை: டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எட்டாவது இடம் என்று மருத்துவ மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கலா தகவல் தெரிவித்துள்ளார்.

dengue fever
author img

By

Published : Oct 10, 2019, 7:22 PM IST

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் டெங்கு, மர்ம காய்ச்சல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அவசரக் கூட்டம் ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் காய்ச்சலால் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனையில் டெங்கு பாதிப்பு என முடிவு வந்தால் அந்த நோயாளியை உடனடியாக எலிசா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் உடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மருத்துவர் கலா செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர். கலா, சமீப காலமாக நாகை மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக 80 முதல் 100 உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இவர்களில் தற்போது ஒரு குழந்தை மட்டும் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு அளவில் டெங்கு காய்ச்சல் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக இருப்பதாகவும், நாகையை பொருத்தவரை டெங்கு பாதிப்பில் எட்டாவது இடத்தில் உள்ளதாகவும், டெங்கு குறித்து மக்கள் யாரும் பீதி அடையவேண்டிய தேவையில்லை எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கோயம்புத்தூரில் பரவும் டெங்கு காய்ச்சல்!

Intro:டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நாகை மாவட்டத்திற்கு எட்டாவது இடம்: மருத்துவ மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குனர் தகவல்.

Body:டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நாகை மாவட்டத்திற்கு எட்டாவது இடம்: மருத்துவ மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குனர் தகவல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் உள்ளிட்ட 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 56 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்காக வெளிநோயாளிகள் வருகின்றனர்.இவர்களில் தீவிர வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவ மனைக்கு நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் (வைரஸ் ஃபீவர்) கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அவசர கூட்டம் ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் காய்ச்சலால் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனையில் டெங்கு பாதிப்பு என முடிவு வந்தால் அந்த நோயாளியை உடனடியாக எலிசா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் உடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர். கலா, சமீப காலமாக நாகை மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக 80 முதல் 100 உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இவர்களில் தற்போது ஒரு குழந்தை மட்டுமே டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக அளவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் இருப்பதாகவும் நாகையை பொருத்தவரை டெங்கு பாதிப்பில் எட்டாவது இடத்தில் உள்ளது என்றும், டெங்கு குறித்து மக்கள் யாரும் பீதி அடையத் தேவையில்லை எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேட்டி- டாக்டர் கலா , மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.