சென்னையில் கரோனா நோய் தீவிரமாகப் பரவிவருகிறது. இதன் காரணமாக சென்னையிலிருந்து நாகை மாவட்டத்திற்குள் வரும் அனைவரும் கரோனா சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இ-பாஸ் இல்லாமல் நாகை மாவட்டத்திற்கு கார், பேருந்து மூலம் வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இ-பாஸ் பெறாமல் சென்னையிலிருந்து நாகை திரும்பிய நாகை நாணயக்காரத் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய தனது மனைவி கீர்த்திகாவை கடந்த வெள்ளிக்கிழமை கார் மூலம் நாகைக்கு அழைத்து வந்துள்ளார்.
இதனை அறிந்த நாகப்பட்டினம் நகர காவல் துறையினர் முருகேசன், கீர்த்திகா தம்பதி மீது காவல்துறை உத்தரவை மதிக்காமல் நோய்த்தொற்றை பரப்புதல் உள்ளிட்ட சில பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து தம்பதி இருவரும் கரோனா பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டு, பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: அத்தையை கொன்றுவிட்டு தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த ஒடிசாவாசி!