நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில், அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ஊராட்சிமன்ற தலைவர் பரிமளா தொடங்கிவைத்தார்.
பள்ளியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதான சாலையில் சென்று முடிவடைந்தது. மேலும், பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை உச்சரித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்தப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கொ.. கொ... கொரோனா...! எவரெஸ்ட் சிகர பயணம் ரத்து.!