நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் பெண்கள், ஆண்கள் என்று தனித்தனியே சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் கரோனா சம்பந்தமான அறிவுரைப்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய ரயில் நிலையங்களுக்கு வரும் வெளிமாநில பயணிகளை ஆய்வு செய்ய, இரண்டு மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆய்வு செய்யப்படுவார்கள். பின்னர், அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால், 108ல் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
தொடர்ந்து, வேளாங்கண்ணி, நாகூர், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் ஆகிய ஆலயங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நாகையில் இதுவரை யாருக்கும் கரோனா நோய் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றைத் தடுக்க பாஜக முயற்சிக்கும் - எல். முருகன்