ETV Bharat / state

அம்மாவின் அருள்வாக்கு: கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பெண் சாமியார் - கரோனா மருந்து

நாகை: கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக நாகையில் பெண் சாமியாரின் பக்தர்கள் மூலிகை செடியுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

covid
covid
author img

By

Published : Mar 20, 2020, 10:52 AM IST

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் -19 வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாட்டு மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவிட்-19 குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மட்டுமின்றி, பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இரவு, பகலாக பாடுபட்டும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், நாகையைச் சேர்ந்த பெண் சாமியார் ஒருவர் கோவிட்-19 நோயைக் குணப்படுத்த தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூறி அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள ஸ்ரீ கண்டிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண் சாமியார் நாகத்தம்மாள் என்கிற செல்வியம்மாள். இவர் அந்த பகுதியில் நாகாத்தம்மன் என்கிற கோயிலை கட்டி பக்தர்களுக்கு குறி சொல்லி அருள்வாக்கு வழங்கி வருகிறார்.

இவர் இன்று (மார்ச் 19) நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்களிடம் கோவிட் -19 நோய்க்கு மருந்து இருப்பதாகவும் எனவே மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டுமெனவும் கூறி செல்வியம்மாளின் பெண் சீடர் ஒருவர் வந்தார்.

covid
கரோனா மருந்து சிறியாநங்கை மூலிகை செடி

அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் கொண்டுவந்திருந்த சிறியாநங்கை மூலிகை செடிதான் கோவிட் -19 நோயை கட்டுப்படுத்தும் மருந்து என்றும் இதனை 9 நாள் காய்ச்சி குடித்துவந்தால் கோவிட் - 19 வைரஸ் குணமாகும் என்றும் கூறினார்.

இது எப்படி சாத்தியம் என செய்தியாளர்கள் கேட்கையில், அம்மனிடம் அருள்வாக்கு கேட்டதாகவும், 10 நாட்கள் பக்தர்கள் கலச பூஜை செய்த பிறகே இந்த மருந்தை அம்மா கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.மேலும் சீனர்கள் பாம்புக்கறி சாப்பிட்டதால்தான் கோவிட்-19 வந்தது என்றும், சிறியாநங்கை செடியின் பக்கமே பாம்பு வராது என்றும், ஆகையால், சிறியாநங்கை செடியை நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சாப்பிட்டால் கோவிட்-19 வரவே வராது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.