ETV Bharat / state

வயிற்றுவலி நோயாளிக்கு கரோனா வார்டில் சிகிச்சை! - Tamil News

வயிற்று வலி சிகிச்சைக்காக கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை மருத்துவமனை தர மறுத்ததால், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல்
author img

By

Published : May 31, 2021, 12:34 PM IST

மயிலாடுதுறை: வயிற்றுவலிக்காக சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு கரோனா தொற்று வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மன்னம்பந்தலைச் சேர்ந்தவர் ராஜி (63). இவர், வயிற்றுவலி காரணமாக நேற்று முன்தினம்(மே.29) மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் கரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து, கரோனா பரிசோதனை செய்த நிலையில், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவரது உடலை சுகாதார வழிகாட்டுநெறிமுறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். கரோனா தொற்று பரிசோதனை முடிவு தெரிந்த பின்னர் செய்து கொள்ளலாம் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

பரிசோதனையின் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று வந்ததையடுத்து, உயிரிழந்த ராஜியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உறவினர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால், சுகாதாரத்துறையினர் உடலை ஒப்படைக்க மறுத்ததால், அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ்-ஐ மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த ராஜிக்கு கரோனா தொற்று இல்லை என்றாலும் அதற்கான அறிகுறிகள் இருப்பதால் ஆரம்ப நிலையாக இருக்கலாம். அதனால் அவரது உடலை சுகாதாரமுறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்” என காவல்துறையினர் தெரிவித்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பா: பாய்ந்த போக்சோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.