ETV Bharat / state

ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு - மூன்று பேர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: கரோனா தொற்றால் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அதன் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

nagapattinam
nagapattinam
author img

By

Published : Jul 30, 2020, 9:49 AM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பரவை காய்கறி மார்க்கெட்டில் 9 வியாபாரிகளுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. ஆயுதப்படையை சேர்ந்த 9 காவலர்கள், 4 கர்ப்பிணிகள், 3 செவிலியர்கள் உள்பட 55 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

இதன் மூலம் நாகப்பட்டினத்தில் பாதிப்பு எண்ணிக்கை 657ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மூன்று பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். சீர்காழியை சேர்ந்த 20 வயது பெண், திட்டச்சேரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, திருமுலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. நாகப்பட்டினத்தை பொறுத்தவரையில் 360 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், நாகப்பட்டினம் அடுத்த பரவை காய்கறி சந்தையில் 9 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை சந்தையை மூட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு அனுமதி? - மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.