ETV Bharat / state

ஆடி அமாவாசையில் குழப்பம்.. மயிலாடுதுறை புனித நீராட குறைந்த மக்கள் கூட்டம்!

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் இடம்பெற்றதால் மயிலாடுதுறை காவிரித் துலாக்கட்டத்தில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனிதமான இடத்தில் ஆடி அமாவாசை தினமான இன்று புனித நீராட வந்த மக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

mayiladuthurai kaveri
மயிலாடுதுறை காவிரி
author img

By

Published : Jul 17, 2023, 1:14 PM IST

அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் திதி அளித்து வழிபாடு செய்தனர்

மாயிலாடுதுறை: அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை,மகாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் புனித நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட கர்ம பூஜைகள் சிறப்பாக செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை திதி நடைபெறும். ஆனால், எப்போதாவது சில நேரங்களில் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் இடம்பெறும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. ஆடி மாதமான இன்று (ஜூலை 17) ஒரு அமாவாசை திதியும் ஆகஸ்ட் 16ஆம் தேதி மற்றொரு அமாவாசை திதியும் வருவதால் பக்தர்களிடையே ஆடி அமாவாசை குறித்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஒரு சிலர் இன்றைய தேதியில் அமாவாசை திதியை கடைப்பிடித்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பலி கர்ம பூஜைகளை செய்து வருகின்றனர். அதன் படி மயிலாடுதுறையில் ஓடும் காவிரி துலாகட்டத்தில் 16 தீர்த்தகிணறுகள் அமைந்துள்ள புனித ஆற்றில் சுற்று வட்டார பகுதி கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒரு சிலர் முன்னோர்களுக்கு திதி அளித்து வழிபாடு செய்தனர். வழக்கமான கூட்டம் இல்லாமல் ஓரளவுக்கு மட்டுமே கூட்டம் காணப்பட்டது.

இதையும் படிங்க: Yamuna water: மெல்ல குறைகிறது யமுனை நதியின் நீர்மட்டம்!

உலக புகழ்பெற்ற இந்த மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இதேபோல், குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் கடலில் கலக்கிறது.

சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரி சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆடி மற்றும் தை அமாவாசையன்று காவிரி சங்கமத்தில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

அதன்படி ஆடி அமாவாசையான இன்று (ஜூலை 17) பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் முழுவதும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பொதுமக்கள் பூம்புகார் காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: IT returns: வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா - படிவம் 16 இல்லாமலும் செய்யலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.