ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டம் - உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமனத்திற்கு வரவேற்பு

author img

By

Published : Aug 18, 2021, 11:00 PM IST

ஹைட்ரோகார்பன் திட்ட விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமனத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமனத்திற்கு வரவேற்பு

நாகப்பட்டினம்: ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட, இனி ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுனர் குழுவை மறுகட்டமைப்பு செய்துள்ளது. அதற்கான நோக்கங்களையும், பொறுப்புகளையும் வரையறுத்துள்ளது. இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஹைட்ரோகார்பன் கிணறுகள்

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு விவசாயத்தையும் மண்ணையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 5 கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரிய போது, அதை தமிழ்நாடு அரசு நிராகரித்தது.

எரிவாயுக் கிணறுகள்

மேலும், தமிழ்நாடு முழுவதும் எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என்று அறிவித்தது. தொடர்ந்து வேளாண்மையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது ஹைட்ரோகார்பன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண் மண்டல சட்டம்

இக்குழு 6 ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பொதுவாக ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் மற்றும் சுரங்கப் பணிகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைபாடுகளை இந்த ஆய்வறிக்கையின் மூலம் நாம் நிவர்த்தி செய்யலாம். 2020-ஆம் ஆண்டு சட்டம் காவிரிப்படுகையின் ஒரு பகுதியை மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.

தொழில்நுட்ப வல்லுநர் குழு

இப்போது தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டத் தொழில்நுட்ப வல்லுநர் குழு தமிழ்நாட்டின் மண்ணையும், நீரையும், சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரங்களையும், தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாட்டையும் பாதுகாக்க உதவும் என்பதால், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறது" என்றார்.

இதையும் படிங்க: முதியோர் பசி தீர்க்க உடன்பிறப்பு உணவகம் தொடங்க வேண்டும் - சிந்தனைச் செல்வன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.