கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்காக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, அரசின் பல திட்டங்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நாகை மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி தடுப்பூசி மருந்தை நேரடியாக வீட்டிற்கே சென்று கால்நடைகளுக்கு போடும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கால்நடை மண்டல இணை இயக்குனர் சுமதி கூறுகையில், நாகையில் 2 லட்சத்து 58ஆயிரத்து 750 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட உள்ளதாகவும் அதில் இதுவரை 80 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுவிட்டோம் எனவும் தெரிவித்தார்.