மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழையூர் கிராமத்தில் நிவர் புயல் காரணமாக நெல் சாகுபடி செய்துள்ள பயிர்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த மழை நீரை வடிகால்களை தூர்வாரி தண்ணீர் வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவிட்டார்.
இதேபோல், நெல் பயிர்களில் பூச்சிகள் தாக்கம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளாண்துறை அலுவலர்களுக்கு பயிர்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அப்போது, நாகை மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், மயிலாடுதுறை சிறப்பு அலுவலர் லலிதா, வேளாண் அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:கரையைக் கடந்த நிவர்: உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு