ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஒன்றாம் தேதி கடலோர காவல்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இன்று இந்திய கடலோர காவல்படை, மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை பகுதிகளை தூய்மைபடுத்தினர்.
இதில், காரைக்கால் பள்ளிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தினர். மாணவர்களுடன் இணைந்நு கடலோர காவல் படை வீரர்களும் கடற்கரையில் ஒதுங்கியிருந்த குப்பைகளை அகற்றினர்.
முன்னதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா கடற்கரைப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். இதில் இந்திய கடலோர காவல் படை அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வரலாற்று தலைவர்களை நினைவுப்படுத்திய பள்ளி மாணவர்கள்!