நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்சில், பூவைத்தேடி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 65 வயது முதியவர் ஒருவர், ஸ்ப்ளெண்டர் பிளஸ் வாகனத்தை எடுத்து ஓட்டிச் சென்று பார்ப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து வண்டியை ஓட்டிச் சென்றவர், நீண்ட நேரம் வராததால் தனது இருசக்கர வாகனம் திருடு போனதை மூர்த்தி உணர்ந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில், தனது கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர், அந்த நபரை தேடி வருகின்றனர்.
நடிகர் வடிவேலுவின் காமெடி பாணியில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவனை கொலை செய்த மனைவி மற்றும் காதலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!