நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று 40 நபர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராமங்கள்தோறும் பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.
அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி சார்பில் பூவைத்தேடி கடை வீதி சாலையில், கரோனா விழிப்புணர்வு குறித்து ஓவியம் வரையப்பட்டது. பிரமாண்டமாக வரையப்பட்ட ஓவியத்தில் தனித்து இருப்போம், வீட்டிலேயே இருப்போம், முகக்கவசம் அணிவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு தனிநபர் விலகலைப் பின்பற்றி, கரோனா ஒழிப்பில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: காவல் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்படம்!