நாகை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் தமிழரசி. இவர் தனது குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு கடைவீதிக்கு பொருள்கள் வாங்க சென்றுள்ளார்.
இதையடுத்து, பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் நகை திருடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழரசி, இதுபற்றி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தமிழரசி வீட்டின் மாடியில் எலக்ட்ரிக்கல் வேலை செய்த நான்கு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.