மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா திருமையிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவரும், இவரது நண்பர்களும் வயல் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள மூங்கில் காட்டில் குழந்தை அழும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுள்ளது. உடனடியாக மனோஜ் மூங்கில் காட்டுக்குள் சென்றுபார்த்துள்ளார்.
அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று ரத்தத்துடன் தொப்புள் கொடியோடு கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அதனைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், குழந்தையை உடனே சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையில் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், குழந்தை குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் நாயை கொன்றவர் கைது