ETV Bharat / state

சீர்காழியில் பாய்லர் வெடித்து விபத்து: தனியார் தொழிற்சாலைக்குத் தடை - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா

சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த ஆய்வுகள் முடியும் வரை தொழிற்சாலை இயங்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு
பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு
author img

By

Published : Feb 21, 2022, 7:13 AM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் மீனிலிருந்து எண்ணெய், பவுடர் மற்றும் இறால் தீவனம் ஆகியவற்றை தயாரிக்கும் தனியார் (பிஸ்மி) தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் நேற்று காலை (பிப். 20) நீராவி கொதிகலன் (பாய்லர்) வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண் ஓரன், பல்ஜித் ஓரன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரகுபதி, மாரிதாஸ், ஜாவித் ஆகிய மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ரகுபதி ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு

அரசிடம் அறிக்கை தாக்கல்

இந்நிலையில், சம்பவ நடைபெற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா, காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

அதன்பின்னர், செய்தியாளரைச் சந்தித்த ஆட்சியர், "இந்த விபத்து குறித்த விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறால் தீவன தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும். அதுவரை தொழிற்சாலை இயங்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை: தொண்டர்களுக்கு அறிக்கை விட்டு அலர்ட் செய்த அதிமுக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.