ETV Bharat / state

"பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவு போன்றது.. குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்காத சீமான்..." - எச்.ராஜா விளாசல்!

பாஜக மற்றும் அதிமுக உறவு என்பது கணவன், மனைவி உறவு போன்றது. ஆகையால் அதைப் பற்றி தினமும் கூறத் தேவையில்லை என மயிலாடுதுறையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

bjp h raja press meet
"பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவு போன்றது" - எச்.ராஜா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 8:19 AM IST

Updated : Sep 7, 2023, 8:55 AM IST

H Raja Press Meet

மயிலாடுதுறையில் விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் இல்லத் திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஹிந்து தர்மத்துக்கு தொண்டு தொட்டு வழங்கி வரும் பேர் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது நிலையானது.

தாய், சகோதரி, மனைவி ஆகிய உறவுகள் நிலையானது. இதை எப்படி மாற்ற முடியும். திராவிடர்கள் அடிமுட்டாள்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. சனாதன தர்மம் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என ஜெர்மானிய ஆய்வாளர் மேக்ஸ்மூல் தெரிவித்துள்ளார். வள்ளுவர் சொன்னதைத் தான் உதயநிதி சொல்லியிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

செய்யும் தொழிலின் அடிப்படையில் வேற்றுமை இல்லை என்பதை செய்தொழில் வேற்றுமை யான் என வள்ளுவரும், கண்ணபிரான், செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் 4 வர்ணங்களை உருவாக்கி உள்ளதாக கூறியுள்ளனர். பகவத்கீதையில் சொன்ன விஷயம் எதையும் வள்ளுவர் விடவில்லை. வைரமுத்து படிப்பறிவில்லாதவர். இவருக்கு தெரிந்ததையெல்லாம் பாடகி சின்மயி me too-வில் கூறிவிட்டார்.

வைரமுத்து ஆண்டாள் குறித்து தனியார் நாளிதழில் அருவெருக்கத்தக்க வார்த்தையில் பேசிய பண்பற்ற நபர். சனாதன இந்து தர்மத்தை இழிவுபடுத்துகிற கும்பல் வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும். இதனை பாஜக மட்டும் சொல்லவில்லை. ஆந்திர முதலமைச்சர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி , டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுபோன்ற சந்தர்ப்பவாதிகள் கூட்டணி சேர்ந்தால் உருப்படாது. பாஜகவினர், இந்து அமைப்பினர் அனைவரும் அனைத்து காவல் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் மனு அளிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் இது தேர்தல் நேரம் என்பதால் 8 மாதங்கள் ஏதும் பேசாமல் இருந்து இருக்க வேண்டும்.

மலேரியா, டெங்கு போன்று அழித்துவிடுவேன் என்று இந்துவை இனப்படுகொலை செய்வேன் என அவர் சொன்னதை வீடுவீடாக பிரச்சாரம் செய்வோம். அழிக்கப்பட வேண்டிய கும்பல் இந்த திராவிட இயக்கங்கள். உதயநிதியின் படம் சாமியாரின் கைகளுக்கு எப்படி சென்றது. நீங்கள் என்ன மார்பிங் செய்தீர்களோ யாருக்குத் தெரியும்?. ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவரப் போகிறோம் என பாரத பிரதமரோ அல்லது வேறு யாருமோ தற்போது தெரிவிக்கவில்லை.

பாஜக - அதிமுக உறவு கணவன் - மனைவி உறவு போன்றது. அதனை தினமும் கூறத் தேவையில்லை. 19 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டுக்கு வாடகையே கொடுக்காத பிராடு சீமான்" என்று எச். ராஜா கூறினார். இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது' - கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

Last Updated : Sep 7, 2023, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.