மயிலாடுதுறை: பிரதமர் நரேந்திர மோடியை இழிவாகச் சித்திரித்து பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் புகாரளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாவார். இவர் சீர்காழி புறவழிச் சாலையிலுள்ள சுவரில் எழுதப்பட்ட, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் வாசகங்களை காவி பெயிண்ட் மூலம் அழித்து புகைப்படம் எடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
அப்பதிவில், “இந்தியாவே உன்னோட கண்ட்ரோல்ல இருக்கலாம். ஆனால் சிறுத்தைகள் எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்” என்று கூறப்பட்டிருந்தது.
இதைக்கண்ட பாஜகவினர், சிவா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சீர்காழி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்துச் சென்றனர்.