நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணனிடம் பாஜகவினர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து புத்தூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் செந்தில்குமார் சென்றார். அப்போது விசிகவினர் அவரை வழிமறித்து கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி வீடியோ வாக்குமூலம் வாங்கியதாகவும், தொடர்ந்து சீர்காழி பகுதியில் பாஜக வளர்ச்சியை தடுக்கும் விதமாக விசிகவினர் இடையூறு செய்வதாகவும் குற்றம்சாட்டினர்.
அவ்வாறு இடையூறு செய்பவர்கள் மீது காவல் துணை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தயார்