ETV Bharat / state

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்

author img

By

Published : Jul 19, 2021, 9:16 AM IST

சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று நீங்கிடவும் பாசுபதாஸ்திர ஹோமம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தார்.

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்

மயிலாடுதுறை: அறுபத்து மூன்று தலங்களில் பதிநான்காவது தலமாக விளங்குகிறது சீர்காழி திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி கோயில். இக்கோயிலில் 13 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் நேற்று (ஜூலை 18) நடைபெற்றது.

இந்த சிறப்பு பாசுபதாஸ்திர ஹோமம் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று நீங்கிடவும் நடைபெற்றது. பின்னர், புனிதநீரால் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார்.

தொடர்ந்து மலைமீது அருள்பாலிக்கும் சட்டநாதர்சுவாமி, தோணியப்பர், உமாமகேஸ்வரி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டிலும், தைலகாப்பு, திருஞானசம்பந்தர் பெருமானுக்கு நடந்த வழிப்பாட்டில் பங்கேற்று அவர் தரிசனம் செய்தார்.

சீர்காழி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ''திருமண மண்டபங்களிடமிருந்து ரூ.2,08,600 வசூல்' - சென்னை மாநகராட்சி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.