கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க 274 கிணறுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை அடுத்த மாதனம், தொடுவாய், பழையபாளையம், திருநகரி, தாண்டவன் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க பணிகள் நடைபெறவுள்ளது.
விவசாய பகுதியான இந்த பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தினால் விவசாயம், குடிநீர், மீன்வளம் மற்றும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகையால் இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தடைசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கொள்ளிடம், பழைய பாளையம், திருமுல்லைவாசல் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலை வந்தடைந்தது.