ETV Bharat / state

மயிலாடுதுறை மதிமுக மாவட்டச்செயலர் பதவிநீக்கம்: மதிமுக துணைபொதுச்செயலர் கூறிய பரபரப்பு தகவல்!

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக செயலாளராக பொறுப்பு வகித்த இ.மார்கோனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து கூட்டப்பட்ட அவசர செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மதிமுக துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் பணத்தை வைத்து எதையும் சாதித்து விடலாம் என்று மார்கோனி நினைப்பது மதிமுகவில் நடக்காது என விமர்சித்துள்ளார்.

மதிமுக மாவட்ட செயலாளர் பதவிநீக்கம்: ஏற்கனவே கொலை வழக்கில் கையெழுத்திட்டு வந்தவர் - ஆடுதுறை இரா.முருகன்

author img

By

Published : Jul 5, 2023, 7:35 PM IST

மயிலாடுதுறை மதிமுக மாவட்டச்செயலர் பதவிநீக்கம்: மதிமுக துணைபொதுச்செயலர் கூறிய பரபரப்பு தகவல்!

மயிலாடுதுறை: 'மயிலாடுதுறை மதிமுக மாவட்டச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மார்கோனி ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தன்னை கொன்றுவிடுவார் என பயமாக உள்ளது எனக் கூறியபோது, அவரைக் காப்பாற்றியது வைகோ' என மதிமுக துணை பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

மதிமுகவில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக இருந்தவர், மார்கோனி. இவர் ம.தி.மு.க-வில் தொடர்ந்து 30 ஆண்டுகள் காலத்திற்கும் மேலாக கட்சிப்பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து, பின்னர் மாநில இளைஞரணிச் செயலாளராகவும் உயர்ந்தார். சமீபத்தில்தான் அவருடைய கடுமையான உழைப்பின் ஊதியமாக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. கட்சியில் வைகோ, துரை வைகோ ஆகியோருடன் நெருங்கிப் பழகியும் வந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மதிமுக செயலாளராக பொறுப்பு வகித்த இ.மார்கோனி கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அப்பதவியில் இருந்து கடந்த திங்கள்கிழமை(ஜூலை 3) நீக்கப்பட்டார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இவர் ரகசியமாக சந்தித்ததாகவும்; அதிமுகவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், அவரது கட்சிப் பதவியை அதிரடியாக பறித்து வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "மயிலாடுதுறை மதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் மார்கோனி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மார்கோனியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மதிமுகவினர் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட மதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று(ஜூலை 5) கூட்டப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் கூறுகையில், ''மயிலாடுதுறை மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் சிலர் மாற்றுக் கட்சியில் இணையத் திட்டமிட்டதாக செய்தி கிடைத்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக இருந்த மார்கோனி பொதுச்செயலாளர் வைகோவால் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொலை வழக்கில் சிக்கிக்கொண்டு, மார்கோனி நாகர்கோயிலில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வந்தபோது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தன்னை ஆள்வைத்து கொன்றுவிடுவார் என பயமாக உள்ளது என்று சொன்னார். அப்போது வைகோ தான் அவரைக் காப்பாற்றினார். இன்று பணத்தை வைத்து எதையும் சாதித்து விடலாம் என்று மார்கோனி நினைப்பது மதிமுகவில் நடக்காது'' என்றார்.

இதையும் படிங்க: மேட்டூர் - வெளியேறும் சாம்பல்: சுவாசக் கோளாறால் தவிக்கும் மக்கள் - கண்டுகொள்ளுமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.