ETV Bharat / state

'அதிமுக திட்டங்கள் மக்களை ஏமாற்றும் கவர்ச்சித் திட்டங்கள்' - கோமல் அன்பரசன் - சட்டப்பேரவைத் தேர்தல் 2021

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்காமல், வெறும் கவர்ச்சித் திட்டங்களை மட்டுமே அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது என அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோமல் அன்பரசன்
கோமல் அன்பரசன்
author img

By

Published : Mar 15, 2021, 8:06 AM IST

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை அமமுக வேட்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான கோமல் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமமுக மாவட்டச் செயலர் செந்தமிழன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமின்றி தமிழ்நாடு மக்களுக்கும் தர்ம யுத்தமாகும். தீய சக்தி என ஜெயலலிதாவால் வர்ணிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது. அதேபோல், தமிழின துரோகிகள் வீழ்த்தப்பட வேண்டும். இந்த இரண்டும் டிடிவி தினகரனால் மட்டுமே முடியும். அதிமுக, திமுக கட்சிகள் எந்த அளவுக்கு ஏமாற்றுபவர்களாக உள்ளனர் என்பதற்கு உதாரணமாக அவர்களது தேர்தல் அறிக்கை உள்ளது.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை அண்மையில் டிடிவி தினகரன் வெளியிட்ட அமமுகவின் தேர்தல் அறிக்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதிமுகவினர் தனது தேர்தல் அறிக்கையில் வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்காமல், வெறும் கவர்ச்சித் திட்டங்களை மட்டுமே அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வாக்குறுதிகளை அளித்துள்ள அமமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை இலவசமாகத் தருவோம், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற தேர்தல் வாக்குறுதிகள் மக்களை
ஏமாற்றுபவையாகும்.
தமிழ்நாடு அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் கூட்டணியை டிடிவி தினகரன் அமைத்துள்ளார். அமமுக தலைமையில் தேமுதிக, ஒவைசியின் எம்ஐஎம் கட்சி, எஸ்டிபிஐ, மக்களரசு கட்சி, விடுதலை தமிழ்ப்புலிகள் இயக்கம், கோகுலம் மக்கள் கட்சி என சமூக நீதிக் கூட்டணியாக அமைந்துள்ள இக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில் எவ்வாறு இந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும்?" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.