நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பூம்புகார் தொகுதிக்குள்பட்ட காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி கீழையூர் கிராமத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை அங்காடியை பூம்புகார் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை பொருள்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். கீழையூர் கிராமத்தில் உள்ள 400 குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயன்பெறுவர். இதில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை!