நாகை மாவட்டம் மத்திய அரசின் ’ஜல் சக்தி அபியான்’ திட்டம் மூலம் மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், குளங்களை மேம்படுத்துதல், நீர் நிலைகளை சீரமைத்து நிலத்தடி நீரை தேக்கும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய இந்தத் திட்டம் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்தத் திட்டங்கள் குறித்து, மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு குறித்து பொதுமக்கள், மாணவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலர் டாக்டர்.சஞ்சீவ் பட் ஜோஷி இது குறித்து பேசுகையில், கடலுக்கு அருகாமையில் உள்ள நாகை மாவட்டத்தில் உப்பு நீர் ஊடுருவும் என்பதால் மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று பங்கேற்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.