மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரத்தை சேர்ந்தவர் தமிழரசன் (73). இவர் குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர். தற்போது குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். கடந்த வாரம் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. தொடந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 45 ஆண்டுகளாக ஒன்றிய செயலாளராக பதவியில் இருந்துள்ளார். குத்தாலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராகவும் பதவி வகித்தவர். தற்போது தலைஞாயிறு நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆலையை திறக்க முயற்சித்து வந்தவர். அதிமுக கட்சி தொடங்கியதிலிருந்து கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் மகனுக்கு கரோனா!