ETV Bharat / state

மயிலாடுதுறையில் தொடர் மழையால் விவசாயம் பாதிப்பு! - ஆய்வு

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை பகுதிகளில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு காப்பீட்டு நிறுவனம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Mayiladuthurai rain
Mayiladuthurai Agriculture
author img

By

Published : Jul 29, 2020, 5:56 PM IST

Updated : Jul 29, 2020, 8:25 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கோட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் அனைத்தும் சாய்ந்து, வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கியுள்ளது.

Mayiladuthurai rain
மழைநீரில் மூழ்கி பயிர்கள்

ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், முற்றிய நிலையில் இருக்கும் பயிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக செறுதியூரைச் செர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில் ”ஆண்டுதோறும் சம்பா சாகுபடி போது மழை வெள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டத்தை ஏற்படுத்தும். குறுவை சாகுபடியில் ஓரளவுக்கு லாபத்தைப் பார்க்கலாம் என்று பம்புசெட் மூலம் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்தோம், பயிர்கள் நன்றாக விளைந்துள்ள நிலையில் ஒரு வாரமாக பெய்யும் மழையால் வயலில் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது.

மயிலாடுதுறையில் தொடர் மழையால் விவசாயம் பாதிப்பு!

பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்து பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக கணக்கெடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Mayiladuthurai rain
வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் ஆய்வு

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே செருதியூர், கோடங்குடி, நல்லத்துக்குடி பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களை வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை பெற வழி முறைகளை தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் ஆப்சென்ட்: ஆட்டம் காணும் கோவை தொழிற்துறை!

Last Updated : Jul 29, 2020, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.