இந்தியாவின் 17-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தேதி தொடங்கி மே 19 முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணன், இன்று நாகை பெரிய கடைத் தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பெரிய கடைத் தெருவிற்கு சென்ற வேட்பாளர், மீன் வியாபாரி ,செருப்புத் தைக்கும் தொழிலாளி பல்பொருள் அங்காடி, பழ வியாபாரி என பல்வேறு தரப்பினரிடமும் தனக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்கும் போது கூடியிருந்த பெண்கள் மத்தியில் பலரது காலில் விழுந்து தொட்டு வணங்கி ஆதரவு கோரினார்.