திமுக துணை பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் பரப்புரையில் ஈடுபட்டபோது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து, அதிமுக சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினரின் தடையை மீறி திடீரென ஆ.ராசாவின் உருவபொம்மையில் மாட்டு சாணத்தை ஊற்றி அதிமுகவினர் அவமரியாதை செய்தனர். மேலும், அவர்கள் ராசாவின் உருவப்படத்தை எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து காவல் துறையினர் எச்சரித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுகவினரும், பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:’காங்கிரஸ்ஸை மட்டுமல்ல, திமுகவையும் ஒழிக்க முயற்சி செய்கிறோம்’ - சீமான்