மயிலாடுதுறை மாவட்டம் அம்பல் காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத் (25) என்பவர் தனது மனைவி சுபஸ்ரீ (23) மற்றும் பத்து மாத குழந்தை சர்வேஷ்வுடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கி மங்கநல்லூர் வழியாக வந்து கொண்டிருந்த போது வழுவூர் பண்டாரவடை என்ற இடத்தில் இருசக்கர வாகனம் திடீரென பஞ்சராகி விபத்துக்குள்ளானது. வாகனத்தை ஓட்டி வந்த வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் மனைவி சுபஸ்ரீக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்து குழந்தையுடன் சாலையோரமா கிடந்துள்ளனர். அவ்வழியாக குத்தாலம் பகுதியில் ஆய்வை முடித்துவிட்டு மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் லலிதா விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்த வினோத் குடும்பத்தினரை தனது காரில் ஏற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் வந்து சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதில் சுபஸ்ரீக்கு தலை, முகம், கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டுள்ளார். 10 மாதக்குழந்தை சர்வேஷ்க்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வாகனத்தை ஓட்டி வந்த வினோத் என்பவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், விபத்துக்குள்ளானவர்களை மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்தில் அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை