ETV Bharat / state

பாதயாத்திரை சென்றவர்களிடம் செல்போன் திருடிய இளைஞர் அடித்துக் கொலை.. 6 இளைஞர்கள் கைது! - nagapattinam district

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களிடம் இருந்து செல்போனை திருடிய வாலிபரை அடித்து கொலை செய்த பாதயாத்திரை குழுவினர் 6 பேரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாதயாத்திரை இளைஞர்களிடம் செல்போன் திருடிய வாலிபர் கொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 9:03 AM IST

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கமாக வைத்து உள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவில் பங்கேற்க, பாதயாத்திரையாக புறப்பட்டு வந்து உள்ளனர். அப்போது அவர்கள் மயிலாடுதுறை, கருவிழுந்தநாதபுரம் அருகே ஆக்கூர் முக்கூட்டு சாலை ஓரம் கடந்த 27ஆம் தேதி இரவு படுத்து தூங்கி உள்ளனர்.

அப்போது நேற்று (ஆக.28) அதிகாலை 4 மணியளவில் அவர்களது பைகளில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஒரு நபர் திருடியதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விழித்துக்கொண்ட ஒரு நபர், தங்கள் பைகளில் உள்ள செல்போனை திருடுவதைக் கண்டு நண்பர்களை எழுப்ப அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

உடனடியாக தப்பியோடி நபரை விரட்டிப்பிடித்த அந்த யாத்திரை இளைஞர்கள் திருடப்பட்ட செல்போன், பவர் பேங்க் ஆகியவற்றை திரும்பப் பெற்றதோடு, அந்த நபரை அனைவருமாக சேர்ந்து பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த மற்ற நண்பர்களையும் செல்போன் மூலம் அழைத்து, "எங்களது செல்போனை திருடிய ஒருத்தனை பிடித்து வைத்துள்ளோம்" என்று சொல்ல, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த யாத்திரை இளைஞர்கள், அடித்த விசயத்தை மறைத்து தங்கள் செல்போனை திருடிய நபரை பிடித்து வைத்துள்ளதாக மட்டும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பனார் கோயில் காவல்துறையினர், தாக்குதலுக்கு உள்ளான நபரை விசாரித்து உள்ளனர்.

விசாரணையில் அந்த நபர் இளங்கோவன் என்றும் கீழத்தெரு, மேலப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல் சேர்ந்து அடித்து உதைத்ததாகவும் சொல்லிவிட்டு மயக்கம் அடைந்து உள்ளார்.

மயக்கமடைந்த இளங்கோவனை உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். இருப்பினும் அடுத்த சில மணி நேரத்தில் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த செம்பனார்கோயில் காவல்துறையினர் இளங்கோவன் உயிரிழந்ததை சொல்லாமல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த அந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன நடந்தது? என்று விபரம் கேட்டுள்ளனர்.

அவர்களும் இளங்கோவன் உயிரிழந்தது அறியாமல் தாங்கள் இருக்கும் இடத்தைக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் இளங்கோவனை அடித்து கொலை செய்ததாகக் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (18), பொன்னிவளவன் (19), பாலசுப்ரமணியம் (21), தினேஷ் (20), சுகுமார் (19) மற்றும் தென்னாம்பாக்கம் முத்து (20) ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பாதயாத்திரையாக நடந்து சென்றவர்கள் தங்கள் செல்போனை திருடிய நபரை அடித்து கொலை செய்ததாகக் கைதாகி சிறை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் செல்போன் திருடி கொலையான இளங்கோவன் திருமணமானவர் என்பதும், ஆடு திருடுவது, செல்போன் திருடுவது தான் அவரது முழுநேர தொழில் எனவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: கால்நடை தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.