ETV Bharat / state

500 நெல்மூட்டையுடன் லாரி கடத்தல்; இரண்டாவது மனைவி வீட்டில் திருடன் கைது - Paddy looted

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 500 நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன்பு நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்டது தெரியவந்தது.

Paddy looted
Paddy looted
author img

By

Published : Aug 31, 2021, 12:06 AM IST

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் 500 மூட்டை நெல்லை லாரியுடன் கடத்திச் சென்ற கில்லாடி திருடன் கைது செய்யப்பட்டார். இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கீழமருதாந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. லாரி ஓட்டுநரான இவர் கடந்த சனிக்கிழமை (ஆக.28) மணல்மேடு கேசிங்கன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 500 நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் காலை சென்று பார்த்தபோது நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து லாரி உரிமையாளர் விஜயகுமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு இதேபோன்று மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்திச் சென்றதும், பின்னர் போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபர் கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அட்சயநல்லூர் கொத்தட்டை என்ற கிராமத்தில் உள்ள அவரது இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடிச் சென்று பார்த்தபோது, அவர் அங்கு தனது மனைவியின் வீட்டின் முன்பு லாரியை நிறுத்திவிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டை சுற்றி வளைத்த போலீசார் ரூ.11.90 லட்சம் மதிப்புள்ள லாரி மற்றும் நெல் மூட்டைகளை கைப்பற்றி, சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் லாரியில் இருந்த நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்த போலீசார் லாரியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை அருகே அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைப்பதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட 500 நெல்மூட்டைகளை லாரியுடன் கடத்திச் சென்ற கில்லாடி ஆசாமியை தீவிர தேடுதலுக்கு பிறகு மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கண்ணாடித் துகள்கள் ஏற்றிச்சென்ற லாரி - மடக்கிப்பிடித்த எம்பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.