ETV Bharat / state

புதுவை அரசுப் பேருந்து மோதி இருவர் மரணம் - போலீசார் விசாரணை

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே புதுவை அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident
accident
author img

By

Published : Mar 7, 2020, 4:56 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து புறவழிச்சாலையில் காரைக்காலிலிருந்து சென்னை செல்லும் புதுவை அரசுப் பேருந்து, எதிரே கொள்ளிடத்திலிருந்து செம்பனார்கோவில் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இறந்தவர்கள் குறித்து விசாரிக்கையில், திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (25), காலகஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மனோகரன் (58) என்பது தெரியவந்தது.

விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் காவல்துறை

மேலும் தலைமறைவான புதுவை அரசு பேருந்து ஒட்டுநரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம்' - பரபரப்பு கிளப்பிய அறிக்கைக்கு 'தல' தரப்பில் பதிலடி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.