நாகை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் தெருவை சேர்ந்த ஹாஜாமைதீன்(32). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹனிதா (25). இவர்களது குழந்தை அஃப்ரா (6) சீர்காழியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஹனிதா, அஃப்ரா மற்றும் குடும்பத்துடன் சீர்காழி அருகேயுள்ள கூழையார் கடலில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நேற்று (ஜூலை 21) குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய அலை வந்து அஃப்ராவை இழுத்துசென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக்கண்டு பதறிப்போன அவரது தாய் மற்றும் உறவினர்கள், இது தொடர்பாக புதுப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்குள்ள மீனவர்களின் உதவியுடன் அஃப்ராவின் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இரவு நேரம் என்பதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்ட நிலையில், காலையில் தேடுதல் பணி மீண்டும் தொடர்ந்துள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்கள் ஒருங்கிணைந்து தூர்வாரும் வாய்க்கால்: ஆக்கிரமிப்புகளால் தடைப்படும் தூர்வாரும் பணி