மயிலாடுதுறை: கச்சேரி சாலையில் உள்ள தனியார் பேக்கரி சார்பில், புத்தாண்டை முன்னிட்டு பல வகையான கோக்குகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கண்ணைக் கவரும் வகையில் 500க்கும் மேற்பட்ட வடிவங்களில் 100 வகையான சுவைகளில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் இடம்பெற்றிருந்தன.
மூன்று அடி உயரத்தில் ராக்கெட்கேக், இன்டர்நேஷனல் ஸ்வீட், அரபிக் பெல்ஜியம் சாக்லேட் கேக் வகைகள், ரசமுல்லா கேக், சாக்கோ கேமல் க்ரென்ச் கேக், ஸ்டாபெரி கேக், ஸ்பைடர் மேன் கேக், பொம்மை வடிவிலான விதவிதமான கேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஏராளமானோர் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு கேக் வகைகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தும் கண்டு ரசித்தனர். மேலும் புதிய வகை கேக்குகளை புத்தாண்டு தினத்திற்காக ஆர்டர் செய்து வாங்கிச் சென்றனர். நியூ இயர் பண்டிகைக்காகக் கண்ணைக் கவரும் வகையில் விதவிதமாக கேக்குகளை செய்து வைத்து கேக் கண்காட்சி நடத்திய நிறுவனத்திற்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: New year celebration: தமிழ்நாடு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?