மயிலாடுதுறை அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 500லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பாலையூர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வழியாக வெளிமாவட்டங்களுக்கு சாராயம் கடத்தப்படுவதாக மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவுக்கு கிடைத்த ரகசியத் தகவலைத் தெடார்ந்து குத்தலாம் தாலுகா திருமங்கலம் பகுதியில் பாலையூர் காவல்துறையினர், தனிப்படை காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக நிற்காமல் வேகமாக சென்ற காரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து சோதனை செய்தபோது, காரில் 500 லிட்டர் கள்ளச்சாரயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர், கார் ஓட்டுநர் கார்த்தியை செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர் குடியிருப்புகளை குறிவைத்து விலை உயர்ந்த சைக்கிள்கள் திருட்டு - இருவர் கைது