ETV Bharat / state

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை - நாகை மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டுமென்று வழக்கறிஞர் சங்கமித்திரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

14 வயது சிறுமி பாலியல் பாலாத்கார வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

author img

By

Published : Aug 7, 2020, 5:28 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான சிறுமியின் தாயார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சங்கமித்திரன் தலைமையில் சமூக ஆர்வலர்கள், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், சிறுமி பலரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பலர் தொடர்புடையவர்கள் என்றும் காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.