நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தெருவில் உறவினர்கள், நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் இதைத் தட்டி கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அதில், 10க்கும் மேற்பட்டடோர் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீர்காழி காவல் துறையினர் இரு தரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிந்து 14 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனைவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பணியிலிருந்த செவிலியர் தற்கொலை! காரணம் என்ன?