நாகை மாவட்டம் மயிலாடுதுறை கீழபட்டமங்கலத்தில் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் ஒன்றுள்ளது. இக்குளம் அதனைச் சுற்றியுள்ள பட்டமங்கலம், கீழப்பட்டமங்கலம், பெசன்ட் நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் போது கீழப்பட்டமங்கலம் வாய்க்கால் வழியாக இக்குளத்திற்கு நீர்வருவது வழக்கம். சமீபகாலமாக கீழப்பட்டமங்கலம் வாய்க்காலில் குடியிருப்புவாசிகள் சாக்கடை நீரை கலப்பதாலும், ஆக்கிரமிப்பு செய்வதாலும் வாய்க்காலில் நீர் செல்ல தடை ஏற்படுகிறது.
இதனால் காவிரி நீர் குளத்திற்கு வருவதில் தடை ஏற்பட்டுவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் வருகிற கொஞ்சநஞ்ச நீரும் சாக்கடைநீர் கலக்கப்பட்டு வருவதால் குளம் முழுவதும் துர்நாற்றம் வீசி நீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதிமக்கள் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குளத்தை மீட்கத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிங்க: காவிரி நீரை வரவழைக்க ஆக்கிரமிப்புப் பணிகளை முடித்து தர கோரிக்கை