மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட சின்ன இலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டில் வசிப்பவர் ரெங்கநாதன் (36). ஹோமியோபதி மருத்துவரான இவர், நேற்று முன்தினம் தனது மனைவி இந்துமதியை அழைத்துக் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்றார். அன்று இரவு மூவலூரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று காலை 9 மணிக்கு ரெங்கநாதன் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில், பீரோவில் இருந்த 11 பவுன் நகை, 2 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரெங்கநாதன் மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.