கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் அனைவரின் நினைவுக்கு வருவது கேக் வகைகள் தான். உலகில் மக்கள் நேரமின்மை காரணமாக கேக் தயாரிப்பதை மறந்து, கடைகளில் பிளாக் பாரஸ்ட், வென்னிலா, சாக்லேட், பிளம், தெராமிஸி என பல வகையான கேக்குகளை வாங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆங்கிலேயர்கள் ஒரு மாதம் முன்னரே கேக்குகள் தயாரித்து பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அதேபோல், வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 1000கிலோ எடையுடன் கிறிஸ்துமஸ் தாத்தா உருவிலான கேக் தயாரிப்பதற்கான திருவிழா நடைபெற்றது.
இதுகுறித்து விடுதி உரிமையாளர் கூறுகையில்," இந்த விழா டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக நடைபெறுகிறது. இங்குத் தயாரிக்கப்படும் கேக் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணிக்கு வருகை தரும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கேக் தயாரிப்பாளர் ராகேஷ்குமார் கூறுகையில்," முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், செர்ரி, பேரிச்சை உள்ளிட்ட பல்வேறு உலர்பழங்களை கொண்டு இந்த கேக் கலவை ஒரு மாதகாலம் ஊற வைக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு இந்த பழக்கலவையுடன் மாவுப்பொருட்கள் சேர்த்து 1000 கிலோ அளவிற்கு கேக் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். இந்த விழாவில் சுற்றுலாப் பயணிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, 75 கிலோ கிராம் உலர் பழங்களால் செய்யப்படும் கேக்!