கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி, மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த கரோனா பரவல், தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஏப்.10) முதல் மீண்டும் சில கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.
இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகை (நாகை, மயிலாடுதுறை) மாவட்டத்தில் இதுவரை ஒன்பதாயிரத்து 867 கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் ஒன்பதாயிரத்து 18 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தற்போது 703 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஒருவர் நேற்று (ஏப்.10) கரோனாவால் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 146ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதிதாக 124 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறை